‘வல்லமை’யாகும் ஏகே 61?

Cinema, News

 325 total views,  5 views today

சென்னை-

நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து வலிமை படத்தின்மூலம் அஜித் -ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்தது. இந்நிலையில் இந்த கூட்டணி மூன்றாவது முறையும் தற்போது ஏகே 61 படத்தில் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அஜித்தின் லுக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து போனிகபூர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித் இந்த லுக்குடன் காணப்பட்டார். இந்தப் புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப் படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் வில்லனாகவும் அதேநேரத்தில் ஹீரோவாகவும் அஜித் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
வரும் 19ம் தேதி சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், அன்றைய தினமே படத்தின் டைட்டிலை படக்குழு அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் டைட்டில் ‘வல்லமை’ என்று கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.

Leave a Reply