வளர்ப்பு நாயால் வந்த வினை- மூதாட்டி மரணம்

India, News

 272 total views,  2 views today

லக்னோ-

உ.பி.,, தலைநகர் லக்னோவில், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையான, சுசீலா திரிபாதி என்ற மூதாட்டி, தன் இளைய மகனுடன் வசித்து வந்தார். பாதுகாப்பிற்கு இரண்டு நாய்களை வளர்த்து வந்த சுசீலாவின் வீட்டிற்கு, நேற்று வழக்கம் போல வேலைக்கார பெண் வந்துள்ளார்.

அங்கு, ரத்த வெள்ளத்தில் சுசீலா கிடந்ததை கண்டு, அலறி அடித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துஉள்ளார். அவர்கள் உதவியுடன், சுசீலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து, காசர்பர்க் காவல் உதவி கண்காணிப்பாளர் யோகேஷ் குமார் கூறியதாவது:சுசீலாவை வளர்ப்பு நாய் கொலை வெறியுடன் கடித்துக் குதறியுள்ளது. அவர் வளர்த்த இரண்டு நாய்களில் ஒன்று, ‘புல்டாக்’ எனும் போர்க் குணம் உள்ள நாயாகும்.பிரிட்டனில் பயங்கர நாய்கள் தடை சட்டத்தில், புல்டாக் இடம்பெற்று உள்ளது.அங்கு, இந்த நாய்களை வீட்டு பிராணியாக வளர்க்க தடை உள்ளது.

சுசீலா, இந்த நாயை வளர்க்க உரிமம் பெற்றுள்ளாரா என, தெரியவில்லை.இது தொடர்பாக விசாரிக்கச் சென்ற போது, அவர் வீடு பூட்டியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.சுசீலாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் தான், விபரம் தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply