வழிபாட்டுக்கும் வரலாற்றுக்கும் ஜோகூரில் மிகவும் பழமையானக் கோயில் !

Malaysia, News

 112 total views,  2 views today

ஜோகூர் – 19 ஆகஸ்டு 2022

கோயில்களுக்குச் செல்பவர்கள் அங்கு இறைவனை வழிபடுவர். கலைச் சிற்பங்களைக் கண்டு வியப்பாரும் உண்டு. வழிபாட்டையும் கலை வளத்தையும் தாண்டி இன வரலாற்றைப் பொது மக்களுக்கு ஊட்ட ஒரு கோயில் உண்டு என்று சொன்னால் நம்புவீர்களா ?

ஆம். அப்படி ஒரு கோயில் நாட்டின் தென் மாநிலமான ஜோகூரில் உள்ளது. அருள்மிகு இராஜமாரியம்மன் தேவஸ்தானத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியர் பாரம்பரிய மையம் எனக் கூறப்படும் Indian Heritage Centre (IHC) அக்தோபர் மாதம் முதல் பொது மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட உள்ளது.

மிகவும் பழமையான இந்தக் கோயிலின் பராமரிப்பில் இருக்கும் அம்மையம் ஜோகூர், ஜாலான் உங்கு புவான் லிட்டில் இந்தியாவில் ரிம 1.5 மில்லியன் மதிப்பிலான இரண்டு மாடிக் கட்டடத்தில் அமைந்துள்ளது. இந்திய இந்திய சமூகம் தொடர்பான பல்வேறு பாரம்பரியக் கூறுகள் இந்த மையத்தில் கண்காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

இது குறித்துத் தகவல் அளித்த அக்கோயிலின் தலைவர் இராஜசீலன் தெரிவிக்கயில், காலனித்துவக் காலத்தில் இருந்து நவீன கால இந்தியர்கள் வரை பன்முகக் கூறுகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

வழிபாட்டுக்கு மட்டும் இல்லாமல் வரலாற்றுக்கும் ஒரு மையமாக இது விளங்கும். இந்திய சமுதாயத்தின் வளமான பாரம்பரியமும் நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்களிப்பு குறித்துமனிதில் முதன்மையாகக் காட்சிப்படுத்த முற்பட்டிருப்பதாக அவர் மேலும் விளக்கினார்.

2018 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கி 2019 ஆம் ஆண்டில் முடிவடைந்திருந்தாலும், கோவிட்-19 பெருந்தொற்றூ முடக்கத்தால் இதன் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது.

 இந்தியர் பாரம்பரிய மையம் ஜோகூர் மாநில சுற்றுலா, சுற்றுச் சூழல், பாரம்பரிய, பண்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் இரவின் குமாரால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட உள்ளது. பல்வேறு கண்காட்சிகள், நடவடிக்கைகள் ஆகியன பொது மக்களின் விழிப்புணர்வுக்காகவும் ஏற்பாடு செய்யப்படும்.

தற்போது இது இலவசம் எனவும் இது வரையில் எந்த நுழைவுக் கட்டணமும் விதிக்கப்படவில்லை.

Leave a Reply