வாகனங்களை மோதிய லோரி ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தார்

Malaysia, News

 232 total views,  4 views today

கோலாலம்பூர்-

கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ சாலையில் 5 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து தொடர்பில் தடுத்து வைக்கப்பட்ட லோரி ஓட்டுனர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
ஜாலான் ஈப்போ சமிஞ்சை விளக்கில் நின்றுக் கொண்டிருந்த வாகனங்களை வேகமாக லோரி மோதி விபத்துக்குள்ளான காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
நேற்று பிற்பகல் 2.40 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் மைவி கார் உட்பட 4 வாகனங்களின் ஓட்டுனர்கள் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பினர்.
வாகனங்களை மோதிய லோரி ஓட்டுநரை சோதனைக்கு உட்படுத்தியதில் அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது கண்டறியப்பட்டதாக கோலாலம்பூர் சாலை போக்குவரத்து, விசாரணை இலாகா தலைவர் ஏசிபி சரிஃபுடின் முகமட் சாலே தெரிவித்தார்.

Leave a Reply