வாகன நிறுத்துமிட கட்டடம் நிர்மாணிக்கப்பட வேண்டும்- தீபக்

Malaysia, News, Politics

 95 total views,  1 views today

கிள்ளான் –

கிள்ளான் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் நிலவும் வாகன நிறுத்துமிடப் பிரச்சினைக்கு தீர்வு காண இரட்டை மாடி வாகன நிறுத்துமிடத்தை கிள்ளான் மாநகர் மன்றம் நிர்மாணிக்க வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் தீபக் ஜெய்கிஷன் தெரிவித்தார்.

இந்த ஆலயம் மட்டுமல்லாது நாட்டிலுள்ள அனைத்து ஆலயங்களிலும் விழா காலங்களின்போது வாகன நிறுத்துமிடப் பிரச்சினை நிலவுகிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இரட்டை மாடி வாகன நிறுத்துமிடம் நிர்மாணிக்கும் திட்டத்தை கிள்ளான் மாநகர் மன்றம் முன்னெடுக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

கிள்ளான் சுந்தரராஜ பெருமாள் ஆலயத்திற்கு நேற்றிரவு வருகை தந்து ஆலய நிர்வாகத்துடன் கலந்துரையாடிய தீபக் செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு சொன்னார்.

Leave a Reply