வாக்களிக்க வாய்ப்பு கொடுங்கள் ! – முதலாளிகளுக்கு சரவணன் பரிந்துரை

Malaysia, News, Politics, Polls

 156 total views,  1 views today

– குமரன் –

தாப்பா  – 16/10/2022

நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஏதுவாக முதலாளிகள் தங்களின் தொழிலாளிகளுக்கு விடுமுறையோ அல்லது ஒரு சில மணி நேரங்கள் கால அவகாசமோ கொடுக்க வேண்டும் என டத்தோ ஶ்ரீ மு  சரவணன் கூறினார்.

இம்முறை நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் 18 வயதுக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க இருக்கின்ற நிலையில், பலரும் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள். தங்களின் மக்களாட்சி உரிமையை அவர்கள் முழுமையாகச் செய்ய முதலாளிகள் கால அவகாசத்தைக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் சொன்னார்.

அதே சமயம், வெளியூரில் இருக்கின்றவர்களுக்கும் முதலாளிகள் அல்லது நிறுவனங்கள் தங்களின் பணியாளர்கள் விடுப்பு கொடுக்க வேண்டும் என டத்தோ ஶ்ரீ மு சரவணன் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply