வாக்களிப்பு மைய தகவல்களை சரி பார்த்துக் கொள்ளுங்கள் !

Malaysia, News, Politics

 86 total views,  1 views today

இரா. தங்கமணி

கிள்ளான் – 11/11/2022

வரும் 19ஆம் தேதி நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்கள் தங்களது வாக்களிப்பு மைய தகவல்களை மீண்டும் சரி பார்க்க வேண்டுமு என்று போர்ட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் கேட்டுக் கொண்டார்.

காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்களிக்கும் ஒருவரின் வாக்காளிப்பு தொகுதி தற்போது கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதிக்கு மாற்றம் கண்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.

அவரின் புகாருக்கு தற்போது நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆதலால் வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் அகப்பத்தில் தங்களது வாக்களிப்பு மைய தகவல்களை சரி பார்த்து கொள்ளுமாறு அஸ்மிஸாம் வலியுறுத்தினார்.

Leave a Reply