வாக்காளர்களின் பெயரையும் தொலைப்பேசி எண்ணையும் குறிப்பிடச் சொல்வதா ? – கண்டனம் தெரிவிக்கும் தியோ நி சிங்

Malaysia, News, Politics, Polls

 61 total views,  1 views today

குமரன் | 19-11-2022

மாலை மணி 4.30 – கூலாய், ஜோகூர் : இங்குள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இங்குள்ள பண்டார் புத்ரா தேசியப் பள்ளியில் 10வது வழித்தடத்தில் இருக்கும் வாக்குச் சாவடியில் வாக்காளர்கல் தங்களின் வாக்கைச் செலுத்தும் முன்னர் அவர்களின் பெயரையும் தொலைப்பேசி எண்ணையும் எழுதச் சொல்லப்படுவதாக தியோ நி சிங் சொன்னார்.

அந்நடவடிக்கைக்கு எதிப்புத் தெரிவித்தவுடன் அந்தப் பட்டியல் கிழித்துப் போடப்பட்டதாகவும் கூறினார்.

இது தேர்தல் ஆணையத்தின் விதிமுறையை மீறியதாகவும், வாக்களிப்பும் வாக்காளர்களின் தகவலும் இரகசியம் எனத் தெரிவித்தார்.

Leave a Reply