வாக்காளர்கள் ஜனநாயக உரிமையை காப்பாற்ற வேண்டும்

Malaysia, News, Politics

 287 total views,  3 views today

ரா.தங்கமணி

ஜொகூர்பாரு-

ஜோகூர் மாநில தேர்தலை புறக்கணிக்காமல் வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று கோலாலம்பூர் ஜசெக செயலவை உறுப்பினர் டிக்கம் லூர்டஸ் வலியுறுத்தினார்.
வாக்களிப்பதால் என்ன நன்மை உள்ளது, வாக்களித்து ஆட்சியை தேர்ந்தெடுத்தால் ஆட்சி நிலையாக இருக்குமா? வாக்குரிமைக்கு உரிய மதிப்பளிக்கப்படுகிறதா? என்ற கேள்விகள் எழுவது இயல்புதான்.
2018 பொதுத் தேர்தலில் மிகப் பெரிய அரசியல் மாற்றத்திற்கு மலேசியர்கள் வித்திட்ட நிலையில் சில துரோகிகளின் சுயநல அரசியலால் பக்காத்தான் ஹராப்பானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
துரோகிகளின் சுயநல அரசியலுக்கு பதிலளிக்கும் வகையில் தங்களது வாக்குரிமையின் பலம் என்னவென்பதை நிரூபிக்க ஜொகூர் மாநில வாக்காளர்கள் தங்களது பலத்தை காட்ட வேண்டுக் என்று பெக்கோக் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ம.கண்ணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டபோது டிக்கம் லூர்டஸ் இவ்வாறு கூறினார்.

Leave a Reply