வாக்குகளில் ‘காசு’ பார்க்கும் வாக்காளர்கள் ?

Malaysia, News, Politics, Polls

 73 total views,  1 views today

– இரா. தங்கமணி –

கோலாலம்பூர் – 8/11/2022

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்கான வேட்மனுத் தாக்கல் நேற்று நடந்து முடிந்துள்ள நிலையில் வேட்பாளர்கள் அனைவரும் தங்களது பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.

தேர்தலில் ஜெயித்தால் தாம் மக்கள் பிரதிநிதி என அரசியல்வாதிகள் கணக்கு போடும் நிலையில் வாக்காளர்கள் புது கணக்கு புது கணக்கு போட தொடங்கியுள்ளனர்.

5 ஆண்டுக்கு ஒருமுறை வாக்கு செலுத்தினாலும் தேர்தல் காலத்தின்போது மட்டுமே நமக்கு மரியாதை. தேர்தலுக்குப் பின்னர் நம்மை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதால் வாக்கை விற்கும் மனநிலைக்கு வாக்காளர்கள் வந்து விட்டனர்.

என் குடும்பத்தில் இத்தனை ஓட்டு உள்ளது. என் பின்னாள் இவ்வளவு கூட்டம் உள்ளது, என் ஓட்டு உங்களுக்க தான் என கூறி வேட்பாளரிடம் பேரம் பேசும் சூழல் இத்தேர்தலில் ஏற்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் ஓட்டு போட்ட பின்னர் நிகழ்ந்த அரசியல் நெருக்கடி, ஆட்சி மாற்றம் போன்றவற்றால் வாக்கு நமது உரிமை என்ற நிலையை மறந்து வாக்குகளில் காசு பார்க்கும் நிலை உருவாகிறது.

Leave a Reply