வாக்குச் சாவடியில் இறப்பு !

Malaysia, News, Politics, Polls

 66 total views,  1 views today

குமரன் | 19-11-2022

மாலை மணி 4.00 – ஜோகூர் : இரு வேறு வாக்குச் சாவடிகளில் தலா ஒரு வாக்காளர் மரணமடைந்துள்ளனர்.

குளுவாங்கிலும் ஜோகூர் பாருவிலும் அந்த இரு இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காலை 9.30 மணி அளவில் சுல்தான் இஸ்மாயில் இடைநிலைப்பள்ளியில் வாக்களிக்க வந்த ஜுஹாரா ஷேட் முகம்மட் தமது இறுதி மூச்சை வாக்குச் சாவடியிலேயே விட்டார் என ஜோகூர் மாநில தேர்தல் ஆணைய அதிகாரி தகவல் அளித்ததாக சினார் ஹாரியான் செய்தி வெளியிட்டிருந்தது.

பூலாய் நாடாளுமன்றத் தொகுதிக்கு வாக்களித்த பின்னர் ஷே முகம்மட்டுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது என அவர் சொன்னார்.

57 வயதான ஜுஹாரா வாக்குச் சாவடிக்கு வரும்போதே உடல் நலக் குறைவாகதான் இருந்தார் எனவும் தாம் வாக்களிக்க வேண்டும் என மிக உறுதியாக ஜுஹாரா சொன்ன பிறகு அதிகாரிகளின் காண்காணிப்பில் வாக்களித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இரண்டாவது சம்பவம் லிட் தெர்க் சீனப் பள்ளியில் நேர்ந்தது.

காலை 10.30 மணி அளவில் 85 வயது துமினா அம்பியா செம்புரோங் தொகுதிக்கு வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு ஆம்புலன்சில் வந்துள்ளார். ஜுஹாரா போல் இல்லாமல் வாக்களிப்பதற்கு முன்னரே துமினா இறந்து விட்டார்.

Leave a Reply