‘வாழ விடுங்கள்’ லோரி ஓட்டுநர்கள் மறியல்

Malaysia, News

 169 total views,  1 views today

டி. ஆர். ராஜா

புக்கிட் மெர்தஜாம்-

தென் செபராங் பிறை மாநகர மன்றத்தின் மீது அதிருப்தி கொண்ட லோரி உரிமையாளர்கள் புக்கிட் மெர்தாஜம் மாநகரர் மன்றத்தின் முன்பு மீண்டும் பதாகைகள் ஏந்தி மறியலில் ஈடுபட்டனர்.

‘எங்களை வாழ விடுங்கள் ,எங்கள் பிழைப்பில் மண்ணை போடாதீர்கள் ,ஒவ்வொரு நாளும் பல போரட்டத்திற்கிடையில் சொற்ப ஊதியத்தை தேடி லோரி ஒட்டுகின்றோம் அதில் மண்ணை போடும் தென் செபராங் பிறை மாநகர் மன்றம் ,எங்களோடு பேச்சு வார்த்தை நடத்தி இணக்க காண வேண்டும், எங்களின் பிரச்சனைகளை செவிமடுக்க நேரத்தை ஒதுக்க வேண்டும் என இங்குள்ள லோரி ஓட்டுநர்களின் உரிமையாளர்கள் தங்களின் கோரிக்கையை முன்வைத்தனர்.


லோரி ஓட்டுநர்கள் அதன் உரிமையாளர்கள் தங்களுக்கு நியாயம் வேண்டும் கூடுதல் பணம் விதிக்கப்படுவதை மாநகர் மன்றம் அகற்ற வேண்டும் என கோரிக்கைககளை முன் வைத்து 50க்கும் மேற்பட்ட லோரி ஓட்டுனர்கள் பதாகைகளை ஏந்தி அமைதி மறியலில் ஈடுப்பட்டனர் .


தென் செபராங் பிறை மட்டுமின்றி பினாங்கு மாநிலத்திலுள்ள லோரி ஓட்டுநர்கள் தங்கள் பிழைப்பிற்காக தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் கழிவுகளை சேகரித்து அதனை தென் செபராங் பிறை பகுதியிலுள்ள பூலாவ் பூரோங் எனப்படும் பகுதியில் கழிவுகளை கொட்டும் பணியில் பல காலமாக ஈடுபட்டு வருகின்றனர்
முன்பெல்லாம் ஒரு லோரிக்கும் வெ.20 வெள்ளி மட்டுமே செலுத்தபட்டன ,எத்தனை முறை வேண்டுமானாலும் குப்பைகளை கொட்டும் வசதி இருந்தது.

ஆனால் சமீப காலமாக ஒரு டன் லோரிக்கு வெ.70 வசூல் செய்யப்படும். அதிலும் தொழிற்சாலை கழிவுகள் அதிகமாக இருந்தால் 3 டன் கூட குப்பைகள் இருக்கும். ஒவ்வொரு டன்னுக்கும் வெ.70 வசூலிக்கப்பட்டால் ஒரு லோரிக்கு மட்டும்வெ.210 செலவிடப்படுகின்றது.
அதுமட்டுமின்றி லோரியின் சேவைக்கான கட்டணங்கள் வெ.150 என தொழிற்சாலை உரிமையாளர்களிடம் நாங்கள் வசூல் செய்யப்படக்கூடும் தற்போது பொருளாதர சூழ்நிலை மந்தமாக இருப்பதனால் தொழிற்சாலை உரிமையாளர்கள் எங்களின் சேவைகள் விலையேற்றத்தி புறந்தள்ள வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதுமட்டுமின்றி இங்கு புதிய லோரி உரிமையாளர்களும் உள்ளனர். பல ஆண்டு காலம் இப்பணியில் ஈடுப்பட்டவர்களும் உண்டும் இதனால் எங்கள் வாழ்வாதரம் அதிகப்படியாக பாதிக்க வாய்ப்பிருப்பதாக அவர்கள் கூறினர்

நவம்பர் மாதம் எந்த நேரத்திலும் தொடங்கப்படவுள்ள இத்திட்டம் தொடர்பாக மாநகரம் நோட்டீஸ் மட்டுமே லோரி நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது இதன் தொடர்பாக எங்கள் நிலை தொடர்பாக எதுவும் கேட்க முன் வரவில்லை. இவர்களின் மெத்தன போக்கு கண்டிக்கத்தக்கது என்று அவர்கள் கூறினர் .


அதுமட்டுமின்றி மாநகர மன்றத்தின் புதிய திட்டங்கள் எங்களுக்கு சுமையை ஏற்படுத்தி வருவதாகவும் ஆனால் எங்களுக்காக வசதிகளை மனித நேய அடிப்படையில் ஏற்படுத்து தருவதில்லை. புதிய திட்டத்தில் ஜிபிஎஸ் எனப்படும் கண்காணிப்பு கருவியை ஒவ்வொரு லோரியிலும் பொருத்தபட வேண்டும், அதற்கான செலவை நாங்கள் ஏற்க்கபட வேண்டும் போன்ற விதிமுறையால் ஒவ்வொரு மாதமும் கூடுதல் செலவு ஏற்படுகிறது. .அதுமட்டுமின்றி ரீபிட் எனப்படும் கார்ட் ஒன்றை விண்ணப்பம் செய்து அதில் பணம் இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் குப்பைகளை கொட்ட வரும்போது வெ.10 செலுத்த இந்த கார்டை பயன்படுத்தபட வேண்டும் போன்ற விதிமுறைகல் பெரும் சுமையாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.


ஒவ்வொரு காலகட்டத்திலும் பணத்தை வசூலிக்க நினைக்கும் மாநகர் மன்றம் குப்பைகள் அகற்றும் போது நாங்கள் படும் பாட்டை சிறிதும் கூட பொருப்படுத்துவது இல்லை .தென் செபராங் பிறை பகுதியில் நிபோங் திபால் லடாங் பைராம் பகுதியில் உள்ள பூலாவ் புரோங் பகுதி சேரும் சகதியுமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் குப்பைகளை கொட்ட போகும் லோரிகள் தடம் புரண்டுள்ளன. அங்கு எங்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் இல்லை . இதனை மநகர கழக ஒருநாளும் உணர்ந்ததில்லை என்று லோரி ஓட்டுநர் சமூகநல கிளப்பின் பிரதிநியான அரீப் இப்ராஹிம் கூறினார் .
பெரிய கற்கள் அப்பாதையில் போடப்பட்டுள்ளன அதில் சுமைகளை ஏற்றி வரும் லோரிகள் சிக்கி கொள்ளாதா? .லோரி தடம் புரண்டால் அதில் பயணிக்கும் ஓட்டுநருக்கு உயிர் சேதங்கள் நிகழ்ந்தால் அவரின் குடும்பத்தை காக்க மாநகர மன்றம் பொறுப்பெடுக்குமா?என கேள்வி எழுப்பினார்.

Leave a Reply