விஜயுடன் இணைவது குறித்து மனம் திறந்த கமல்

Cinema, India, News

 255 total views,  1 views today

கோலாலம்,பூர்-

மலேசியாவில் நடந்த ‘விக்ரம்’ பட புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசனிடம் செய்தியாளர் ஒருவர், ‘விக்ரம்’ படத்தின் மூன்றாவது பாகத்தில் தளபதி விஜய்யை எதிர்பார்க்கலாமா? என்று கேட்டார். இந்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘விக்ரம் 3’ படத்திற்காக ஏற்கெனவே ஒருவரை ஒப்பந்தம் செய்து வைத்துள்ளோம் என்று சூர்யாவை மறைமுகமாக கூறினார். அதே நேரத்தில் விஜய் ஒப்புக் கொண்டால் அவரை வைத்து படம் தயாரிக்க ராஜ்கமல் பிலிம்ஸ் தயாராக உள்ளது என்று கூறினார்.

ஏற்கெனவே ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் கமல்ஹாசனின் இந்த பதிலால் விரைவில் கமல்ஹாசன் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply