வினோஷினியின் மரணத்திற்கான உண்மை காரணத்தை வெளியிடுக- மஸ்லீ

Malaysia, News

 311 total views,  1 views today

கோலாலம்பூர்-

மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படும் கெடா, வட மலேசியா பல்கலைக்கழக கணக்கியல் துறை மாணவி சி.வினோஷினியின் மரணத்திற்கான அடிப்படை காரணத்தை வெளியிட வேண்டும் என்று சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்லீ மாலிக் பல்கலைக்கழகத்தை வலியுறுத்தினார்.

வினோஷினியின் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொண்ட அவர், தனது மகளின் மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்து விளக்கம் கோர மாணவியின் தந்தை ஆர்.சிவகுமாருக்கு உரிமை உள்ளது.

“பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு பிரச்சனைகள் காரணமாக இருந்தால், அந்த சம்பவம் மற்ற மாணவர்களுக்கு ஏற்படுவதை நிச்சயமாக விரும்பவில்லை.

“எஸ் வினோசினியின் மரணத்திற்கு பல்கலைக்கழகமும் மற்றும் உயர்கல்வி அமைச்சும் முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.  மேலும் வினோஷினியின் மரணம் குறித்து அவரின் குடும்பத்தினருக்கும் பொதுமக்களுக்கும் திருப்திகரமான விரிவான விளக்கம் வழங்கப்படும் என தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

Leave a Reply