விபத்தினால் மரணமடைந்த விஜயகுமாரின் மனைவிக்கு சொக்சோவின் வெ.2,232 மாதாந்திர உதவித்தொகை- டத்தோஸ்ரீ சரவணன்

Malaysia, News

 270 total views,  1 views today

பூச்சோங்-

கடந்தாண்டு வேலையில் இருந்து வீடு திரும்பும்போது விபத்துக்குள்ளான பிறகு ஏற்பட்ட மூளைச் சிக்கலின் விளைவாக உயிரிழந்த விஜயகுமாரின் மனைவி திருமதி பூங்கோதையிடம் சொக்சோவின் உதவித்தொகையை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கினார்.

பூச்சோங்கிலுள்ள விஜயகுமாரின் இல்லத்திற்குச் சென்ற டத்தோஸ்ரீ சரவணன் சொக்சோவின் உதவித் தொகை வெ.23,000.00, சிகிச்சை பெற்ற காலத்தில் தற்காலிக இயலாமைக்கான நன்மைகள் வெ.17,344.00, இறுதிச்சடங்கிற்கான உதவித்தொகை வெ.2000.00 ஆகியவற்றை வழங்கினார்.

அதே வேளையில் வாரிசுகளுக்கான மாதாந்திர உதவித் தொகையாக வெ.2,232.00 வழங்கப்படும் என்று கூறிய சரவணன், 21 வயதுக்குக் குறைவான பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தையும் பெர்கேசோ ஏற்றுக் கொள்ளும் என்று சொன்னார்,

தொழில் செய்யும் தரப்பினர் சொக்சோ கட்டணத்தை செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். மாதந்தோறும் சிறிய கட்டணப் பங்களிப்பையே இதில் செய்யும் வேளையில் அது சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்திற்கு பேருதவியாக இருக்கலாம்.

மனிதவள அமைச்சின் SOCSO வழி இந்த அனைத்து நன்மைகளையும் முறையே பெற்றுள்ளனர் என்பதில் திருப்தி என்ற அவர், மலேசியக் குடும்பம் என்ற வகையில் மனிதவள அமைச்சு பணியிட விபத்துகளால் பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு உரிய உதவி மற்றும் பாதுகாப்பு வழங்க கடமைப்பட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ சரவணன் மேலும் சொன்னார்.

இந்நிகழ்வில் மஇகாவின் உதவித் தலைவரும் செனட்டருமான டத்தோ டி,மோகனும் உடனிருந்தார்.

Leave a Reply