விவேக்கின் மரணம் தடுப்பூசியால் அல்ல

India, News

 253 total views,  1 views today

சென்னை,அக்.23-

தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராக விளங்கிய விவேக்கின் மரணம், கோவிட்  தடுப்பூசியால் ஏற்பட்டதல்ல. மாறாக மாரடைப்பின் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி பிறகான பாதக நிகழ்வுகளை ஆராயும் தேசிய குழு (AEFI) வெளியிட்ட அறிக்கையில், விவேக்கின் மரணத்திற்கும் கோவெக்சின் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை. 59 வயதான விவேக்குக்கு இதய ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தது. அடைப்பின் காரணமாக இதயத்தால் ரத்தத்தை பம்ப் செய்ய முடியாமல் போவதால் ஷாக் ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு அசாதாரண இதய துடிப்பும் காணப்பட்டது. இந்த காரணங்களால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

E-Paper வடிவில் செய்திகளை படிக்க கீழே அழுத்தவும்…

மேலும் விவேக்கின் மரணம் ‘சி’ பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. தற்செயல் நிகழ்வு அல்லது ஏற்கெனவே வேறு உடல்நலக் காரணங்கள் அல்லது வேறு ஏதாவது விஷயங்களுக்கு வெளிபட்டதால்  ஏற்பட்ட விளைவால் ஏற்பட்டிருக்கலாம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவெக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவேக்கிற்கு ஏப்ரல் 17ஆம் தேதி அதிகாலை 4.35 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார். விவேக்கின் மரணம் சர்ச்சையான நிலையில் பலர் இந்த காரணத்தால் தடுப்பூசி போட்டுக் கொள்வதையும் தவிர்த்தனர் என்பது குறிப்பிடத்தகக்து.

Leave a Reply