வீடு தேடி வரும் இன்சுலின் மருந்துகள் : இனி அதிக நேரம் வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை ! – கேஎல் – சிலாங்கூர் மக்களுக்கு நற்செய்தி

Uncategorized

 22 total views,  1 views today

குமரன் | 20-1-2023

நீங்கள் கோலாலம்பூர் – சிலாங்கூரில் வசிக்கிறீர்களா ? கோலாலம்பூர் மருத்துவமனையிலும் பல்கலைக்கழக மருத்துவமனைகளிலும் தொடர் சிகிச்சையைப் பெற்று வருகிறீர்களா ? அப்படியானால், உங்களுக்கான நற்செய்தி இதோ !

இனி நீங்கள் வரிசையில் நின்று மருந்துகளைப் பெறக் காத்திருக்கத் தேவையில்லை. அவை உங்கள் வீடு தேடி வரும் சேவையைத் தற்போது இங்குள்ள குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

ஏற்கெனவே POS MALAYSIA இந்தச் சேவையை அறிமுகப்படுத்தி அரசாங்க மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சைப் பெற்று வருகிறவர்கள் பயன்படுத்தி பலனடைந்து வருகிறார்கள். ஆனால், அந்தச் சேவையில் இன்சுலின் போன்ற குளிரூட்டப்பட்டப் பெட்டியோ கொள்கலன் வசதியோ இல்லை.

ஆனால், Allmeds சேவை வழி அந்த வசதியும் செய்து கொடுக்கப்படுகிறது.

1. UM3 என்றால் என்ன ?

கோலாலம்பூர் மருத்துவமனையிலும் பல்கலைக்கழக மருத்துவமனைகளிலும் தொடர் சிகிச்சை பெறுகிறவர்கள் இந்தச் சேவையைக் கொண்டு மருந்துகளைத் தங்களின் வீட்டிற்கேக் கொண்டு வந்து கொடுக்கப்படும் சேவையாகும். இதனால், நீளமான வரிசையில் அதிக நேரம் மருத்துவமனையிலேயே காத்திருக்க வேண்டியதில்லை. மேலும், வேலை நேர இடையூறு இல்லாமலும் மறந்து விடாமலும் இருக்க இந்தச் சேவை உதவுகிறது.

*அனுப்பும் செலவும் மருந்துகளைப் பெறுகிறர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2. Allmeds என்றால் என்ன ?

சாதாரண, வழக்கமான அல்லது குளிரூட்டப்பட்டப் பெட்டியோ அல்லது கொள்கலனோ தேவைப்படும் இன்சுலின் போன்ற மருந்துகளை நோயாளிகளின் வீட்டிற்கே அனுப்பி வைக்கும் சேவை வழங்குநர்.

3. Ubat Rangkaian Sejuk மருந்துகள் என்றால் என்ன ?

2° – 8 ° பாகை வெப்பநிலை சூழலில் வைக்கப்பட வேண்டிய மருந்துகள். எடுத்துக் காட்டு : நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் இன்சுலின்

4. யார் இந்தச் சேவையை மேற்கொள்வர் ?

கோலாலம்பூர் மருத்துவமனையின் மருந்தகப் பிரிவும் Farmasi பயிற்சிபெற்ற அனுப்பும் சேவை வழங்நரும் இதனை மேற்கொள்வர்.

 • இந்தச் சேவையைப் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் ?
 • ஒரு மாதத்திற்கும் மேலாகத் தேவைப்படும் மருந்துகளை மருத்துவர் வழங்க குறிப்பு இருக்க வேண்டும்.
 • அந்த மருந்துகளை உட்கொள்வது குறித்த புரிதல் நோயாளிகளுக்கு இருக்க வேண்டும்.
 • உளவியல் அல்லது அபாயகரமான மருந்துகளாக அவை இருக்கக் கூடாது.
 • கோலாலம்பூர் – சிலாங்கூர் பகுதிகளில் இருக்கும் நோயாளிகளுக்கு மருந்துகள் அனுப்பப்படும்.
 • அனுப்பும் சேவையை யோயாளிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பகுதிமருந்து வகைகட்டணம்
கோலாலம்பூர் – சிலாங்கூர்குளிர் நிலை மருந்துகள்ரிம 15.00
கோலாலம்பூர் – சிலாங்கூர்வழக்கமான மருந்துகள்ரிம 10.00

5. எவ்வாறு இந்தச் சேவையைப் பயன்படுத்துவது ?

6. கட்டண முறை

 • ரொக்கமாகவும் இணையவழியும் கட்டணத்தைச் செலுத்தலாம்.

7. எந்தெந்த மருத்துவமனைகளில் இந்தச் சேவை உள்ளது ?

 • கோலாலம்பூர் பொது மருத்துவமனை (HKL)
 • மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை (PPUM)
 • தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை (HUKM)
 • புத்ரா பல்கலைக்கழக மருத்துவமனை (HUPM)

தொடர்புக்கு : 03-80826969 / 0 111690 2865

Leave a Reply