
வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ள தடை
285 total views, 1 views today
அலோர்காஜா-
நவம்பர் 20இல் நடைபெறும் மலாக்கா மாநில தேர்தலில் பிரச்சாரக் கூட்டங்களுக்கும் வீடு வீடாக பிரச்சாரம் செய்வதற்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
சுகாதார அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 பெருந்தொற்றுக்கான எஸ்ஓபி-க்கள் விதிக்கப்பட்டுள்ளன.
பொதுவெளியில் ஒன்றுகூடல் நடத்துவதற்கோ வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்வதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் கனி சாலே தெரிவித்தார்.