
வூஹான் நகரில் மீண்டும் கோவிட் பரவல்
361 total views, 1 views today
பெய்ஜிங்
கோவிட்-19 வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய ஹூவான் நகரில் ஓராண்டுக்கு பின்னர் மீண்டும் கோவிட்-19 வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து அந்த நகரிலுள்ள அனைத்து மக்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்துவதற்கு சீன அதிகாரிகள் முன்வந்துள்ளனர். இங்குள்ள ஒரு கோடியே 10 லட்சம் மக்களுக்கு இந்த பரிசோதனை நடத்தப்படும் என்று நகரின் மூத்த அதிகாரி லி தாவ் கூறினார்.