
வெயில் காலம் : மிளகாய், கத்திரிக்காய் விளைச்சல் 50% சரிவு !
49 total views, 2 views today
ஷா ஆலாம் | 9-5-2023
தற்போதைய வெயில் காலத்தால் சிறு தோட்ட உரிமையாளர்களும் விவசாயிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, மிளகாய், கத்திரிக்காய் போன்றவைகளைப் பயிரிடும் விவசாயிகளின் விளைச்சல் 50% சரிவைச் சந்தித்துள்ளது எனக் கூறுகிறார்கள்.
அதிக வெப்பத்தால் காய்கறிகளின் தரமும் பாதிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் குறைந்துள்ளது. அதே சமயம் விளைச்சல் பூச்சிகளின் தாக்குதலுக்கும் இலக்காகியுள்ளன.
கடந்த திசம்பர் மாதமே இதன் தாக்கத்தை அவர்கள் சந்திக்கத் தொடங்கி விட்டதாகவும் கடந்த மாதம் இறுதி வரை அது நீடித்திருப்பதாகவும் வருத்தத்துடன் கூறுகின்றனர்.
வருமானம் குறைந்தது மட்டும் இல்லாமல் விளைச்சலைப் பாதுகாக்கும் செலவும் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக் காட்டினர். பூச்சிக் கொல்லி மருந்துக்காக இரு மடங்கு அதிகம் செலவு ஏற்பட்டிருப்பதாவும் தெரிவிக்கின்றனர்.
இதனால், காய்கறிகளின் விலையும் சந்தையில் அதிகரிக்கக் காரணமாகவும் அமைவதாகவும் குறிப்பிட்டனர்.