வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய பெர்மிட் தேவையில்லை- பிரதமர்

Malaysia, News

 233 total views,  1 views today

கோலாலம்பூர்-

வெளிநாடுகளில் இருந்து மலேசியாவிற்கு தருவிக்கப்படும்  உணவுப் பொருட்களுக்கான இறக்குமதி பெர்மிட்டை (AP) ரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

பிரதமரின் கூற்றுப்படி, இந்த ரத்து உடனடியாக நடைமுறைக்கு வருகிறது, மேலும் வெளிநாடுகளில் இருந்து உணவுகளை இறக்குமதி செய்ய அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

“இதன் தொடர்பில் விவசாய அமைச்சகம் (மற்றும் உணவுத் தொழில்) விரிவாக அறிவிக்கும் என்று நான் நம்புகிறேன்… உணவுப் பொருட்களுக்கு இனி இறக்குமதி பெர்மிட் இருக்காது என்று நாங்கள் முன்பே ஒப்புக்கொண்டோம்.

நம் நாட்டிற்கு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய அனைவருக்கும் அனுமதி உண்டு. எனவே கால்நடைகள், இறைச்சி உட்பட  எல்லா வகையான பொருட்களையும் இறக்குமதி செய்ய, இன்று முதல் நமக்கு பெர்மிட் தேவையில்லை” என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.

Leave a Reply