வெளிநாட்டுத் தொழிலாளர் இறக்குமதிக்கு அமைச்சர்களிடம் இருந்து அழுத்தமா ? – மறுக்கிறார் டத்தோ ஶ்ரீ மு சரவணன்

Malaysia, News

 248 total views,  1 views today

– குமரன் –

ஈப்போ – 11 செப் 2022

அமைச்சர் உட்பட சில தரப்பினரின் ஆதரவுக் கடுதத்தைக் கொண்டு வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்கும் சிறப்பு அனுமதியைப் பெற முடியாது என மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ மு சரவணன் தெரிவித்தார். நேற்று தொடங்கி சமூக ஊடகங்களில் அவ்வாறானக் கடிதம் ஒன்று பகிரப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் இவ்வாறு கூறினார்.

முடிவு செய்யப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றி இயங்கலை வழி செய்யப்படும் விண்ணப்ப முறையே ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் நிலையிலான ஆதரவுக் கடிதத்தைத் தாம் பெற்றது உண்மை எனக் க்கூறிய அமைச்சர், முறையான விண்ணப்பம் செய்தால் மட்டுமே அஃது ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்.

பிரதமர் உட்பட சில அமைச்சர்களிடம் சிலர் நேரடி விண்ணப்பமும் மேல்முறையீடு செய்தாலும்கூட, மனிதவள அமைச்சுக்கே அவை அனுப்பி வைக்கப்படும். இதுதான் அமைச்சின் விதிமுறை. எனவே, எல்லாவற்றையும் தமது அமைச்சு அங்கீகரித்து அனுமதி வழங்கிடாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

எந்த அமைச்சரிடத்தில் இருந்தும் தமக்கு அழுத்தம் வந்ததில்லை எனத் தெரிவித்த சரவணன், சிறப்பு அனுமதியை வழங்கும் அதிகாரம் பிரதமருக்கு இருப்பதாகவும் அவர் சொன்னார்.

இதனிடையே, பிரதமர் துறை அலுவலகத்தில் இருந்து மனிதவள அமைச்சரின் சிறப்பு செயலாளருக்கு ரஒரு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதில், 12,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்க சிறப்பு அனுமதிக்கான விண்ணப்பம் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தக் கடிதத்தை lady_bugg11 எனும் டுவிட்டர் பக்கத்தில் நேற்று மாலை பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

அண்மையக் காலமாக, மனிதவள அமைச்சுக்குப் பல நிறுவன முதலாளிகளின் படையெடுப்பு அதிகரித்து நெரிசலாகக் காணப்படுவது குறித்து அமைச்சரிடம் வினவியபோது, முன்பதிவும் அழைப்பும் இல்லாமல் வருகையளித்தவர்களால் இந்த நிலை ஏற்பட்டதாக விளக்கினார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்கும் முறை நாடு முழுவதும் உள்ள ஆள்பலத் துறைக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. புத்ராஜெயாவில் மட்டும் இல்லை. ஒரே ஒரு நாள் அதிக நெரிசலால் நாள் முழுவதும் முதலாளிகள் அமைச்சில் காத்திருக்கும் நிலை இனி இல்லை என்றார்.

நாள் ஒன்றுக்கு மனிதவள அமைச்சில் 300 பேருக்கு மட்டுமே அனுமதித்துள்ளதாக அறியப்படுகிறது.

Leave a Reply