வெளிநாட்டுத் தொழிலாளர் வருகையின்போது முதலாளிகள் வரவேற்கக் காத்திருக்க வேண்டும் !

India, Malaysia, News, World

 204 total views,  1 views today

– குமரன் –

சிப்பாங் – 28 செப் 2022

 வெளிநாட்டுத் தொழிலாளர்களை மலேசியாவுக்குத் தருவிக்கும் முதலாளிகள், அவர்கள் வருகையின்போது கோலாலம்பூர் அனைத்துலக வானூர்தி நிலையத்தில் தயாராகக் காத்திருக்க வேண்டும் என குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் கைருல் ஸைமி டாவுட் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் முறையான ஆவணங்கள் தொடர்பான அனைத்துப் பணிகளையும் தாங்களே மேற்கொண்டு மலேசியாவுக்கு வரவழைக்கப்பட்டவர்கள் தங்கள் தொழிலாளர்களே என உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.

குடிநுழைவுத் துறையின் அந்த விதிமுறைப்படி, வெளநாட்டுத் தொழிலாளர்களை முதலாளிகள் பெறும் அந்த நடவடிக்கைக்கு ஆறு மணி நேர கால அவகாசம் கொடுக்கப்படுவதாகவும், தேவைப்படுமாயின் அதிக நேரம் நீட்டிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உண்மையான – சம்பந்தப்பட்ட முதலாளிகள் அங்கு வரவில்லை என்றால், அந்தத் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், அனைத்து தொழிலாளர்களுக்கும் முதலாளிகள் இருப்பதை உறுதி செய்வதற்காகவே என்றார் அவர்.

இதரச் செய்திகள்

இந்த விதிமுறை மீறப்பட்டால் மலேசியா வந்த வெளிநாட்டுத் தொழிலாளர் அவர்களது நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள். என

ஆறு மணி நேரத்திற்குள் முதலாளிகள் தங்களின் தொழிலாளர்களை அழைத்துச் செல்லாத நிலையில் இது போன்று திருப்பி அனுப்பும் குடிநுழைவுத் துறையின் நடவடிக்கை குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. தாமதம் ஏற்படும் நிலையில் அத்துறை பொறுப்பேற்பதில் இருந்து தவற்ற்கிறது எனக் கூறப்பட்டு வந்தது.

நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்டது முதல் கடந்த 1 ஏப்பிரல் முதல் 26 செப்தம்பர் வரையில் 98,079 வெளிநாட்டுத் தொழிலாளர்களை குடிநுழைவுத் துறை நிர்வகித்துள்ளது என கைருள் சொன்னார்.

Leave a Reply