வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடி ராக்யாட் மலேசியா இயக்கம் உதவிக்கரம்

Malaysia, News

 197 total views,  2 views today


ரா.தங்கமணி

ஷா ஆலம், டிச.28-
சிலாங்கூரை உலுக்கியுள்ள வெள்ளப் பேரிடரில் வெகுவாக பாதிக்கப்பட்ட தாமான் ஶ்ரீ மூடா மக்களுக்கான உதவித் திட்டங்களை பல்வேறு தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.அவ்வகையில் நாடி ராக்யாட் மலேசியா இயக்கமும் களப்பணி ஆற்றி வருகிறது.


கடந்த சனிக்கிழமை வெள்ளம் பெருகி மக்கள் தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில் மக்களை மீட்கும் நடவடிக்கையை முன்னெடுத்தோம். அப்போது முதல் தற்போது வரை மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம் என்று இயக்கத்தின் தலைவர் அழகன் கூறினார்.


மக்களுக்கான உதவிப் பொருட்கள், உணவுகள் என பல உதவித் திட்டங்கள் கடந்த ஒருவார காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று கூறிய அவர், இயக்கத்தின் ஆலோசகர் டத்தோ நாயுடு (ஶ்ரீ மூடா), டத்தோ சுமன், பிங்கோ (ஶ்ரீ மூடா), டத்தோ சுமன், மூர்த்தி (நாகம்மாள் ஆலயம்), பாலா (ஆதரவு), டத்தோ ஷரன் (முதன்மை ஆதரவாளர்), டத்தோ சிவா (கோலசிலாங்கூர்) ஆகியோரின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடன் இயக்கத்தின் உறுப்பினர்களின் தன்னார்வல நடவடிக்கையினாலும் இரவு பகலாக உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார் அவர்.


இதனிடையே, தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடர் மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளதோடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரண நிதியை இன்னும் கூடுதலாக வழங்க வேண்டும் எனவும் பெருமளவு பொருள் சேதத்தை சந்தித்துள்ள மக்களுக்கு அது பெரும் உதவியாக இருக்கும் என்றும் டத்தோ நாயுடு கோரிக்கை விடுத்தார்.


அதோடு,நேற்று இவ்வியக்கத்தின் கூடாரத்தில் ஐ-மாரேட் இயக்கத்தினர் மருத்துவ நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் பிரச்சினை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உட்பட பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டிருப்பதாலும் வெள்ளத்தில் பலர் தங்களது மருந்துகளை இழந்திருப்பதாலும் இலவச பரிசோதனையும் மருந்துகளையும் வழங்கி வருவதாக அவ்வியக்கத்தின் ஆலோசகர் சலீம், துணை முதன்மை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸஃபிக் ஆகியோர் தெரிவித்தனர்.

Leave a Reply