வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் உதவி

Malaysia, News

 281 total views,  2 views today

கிள்ளான் –

அண்மையில் சிலாங்கூர் மாநிலத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அதில் செந்தோசா பகுதியில் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் அன்பளிப்புப் பொட்டலங்களை வழங்கி உதவினார்.
அண்மையில் தாமான் செந்தோசா காளிகாம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட குணராஜ், 50 குடும்பத்தினருக்கு மளிகைப் பொருட்கள் அடங்கிய பொட்டலங்களை எடுத்து வழங்கினார்.


வெள்ளம் ஏற்படுத்திய சேதத்திலிருந்து மக்கள் மீண்டு கொண்டிருந்தாலும் இன்னும் அவர்கள் பழைய நிலைக்கு திரும்ப காலதாமதமாகும் என்று குறிப்பிட்ட அவர், இதுபோன்ற சிறு உதவிகள் அவர்களுக்கு ஆறுதலாக அமையலாம் என அவர் குறிப்பிட்டார்.
கோவிட் 19 பெருந்தொற்று காலத்திலும் எஸ்ஓபி நடைமுறைகளை கடைபிடித்து பொங்கல் விழாவை கொண்டாடுவதை தவறி விடக்கூடாது என்று குணராஜ் வலியுறுத்தினார்.
பல்வேறு போட்டி அங்கங்களுடன் பொங்கல் விழா இனிதே கொண்டாடப்பட்டது.

Leave a Reply