வெள்ளப் பிரச்சினையை எதிர்கொள்ள 1,000 தன்னார்வலர்கள் – தீபக் ஜெய்கிஷன்

Malaysia, News, Politics

 144 total views,  1 views today

கிள்ளான் –

கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றால் இங்கு நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு அதிரடி தீர்வு காணப்படும் என்று இத்தொகுதியின் சுயேட்சை வேட்பாளர் தீபக் ஜெய்கிஷன் தெரிவித்தார்.

வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஏதுவாக 1,000 தன்னார்வலர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.

அதோடு, வெள்ளத்தில் சிக்கும் மக்களை மீட்க 20 மீட்புப் படகுகள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்படும்.

வெள்ளம் ஏற்பட்டால் அதில் மக்கள் சிக்கி பாதிப்படையக்கூடாது எனும் நோக்கில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று மக்களுடனான சந்திப்பின்போது தீபக் ஜெய்கிஷன் தெரிவித்தார்.

அதோடு, கிள்ளான் மக்களுக்கு இன்னும் அதிகமான நலத் திட்டங்களை தம்முடைய தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

Leave a Reply