வெ.120 மில்லியன்; கலகம் பிறக்குமா?

Malaysia, News

 205 total views,  2 views today

கோலாலம்பூர், அக்.31-
நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் 2022இல் தமிழ்,சீனப் பள்ளிகளுக்கென தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படாது இந்திய சமூகத்தின் மத்தியில் சர்சசையாக உருவெடுத்துள்ளது.

கடந்த கால பட்ஜெட் அறிவிப்புகளில் தமிழ்ப்பள்ளிகளுக்கென வெ.50 மில்லியன் தனி ஒதுக்கீடாக அறிவிப்பு செய்யப்படும்.
ஆனால் 2022க்கான பட்ஜெட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கென தனி ஒதுக்கீடு அறிவிக்கப்படாமல் தமிழ், சீனப் பள்ளிகளுக்கு மொத்தமாக சேர்த்து வெ. 120 மில்லியன் ஒதுக்கீட்டு நிதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள வெ. 120 மில்லியனில் எத்தனை மில்லியன் தமிழ்ப்பள்ளிகளை சேரும்? எத்தனை மில்லியன் சீனப் பள்ளிகளுக்கு சென்றடையும் என்ற கேள்வி இந்திய சமுதாயத்தில் எழுந்துள்ளது.
மானிய ஒதுக்கீட்டு விவகாரத்தால் தமிழ், சீனப் பள்ளிகளுக்கான மேம்பாட்டுப் பணிகள் பாதிக்கப்படாதா?


தமிழ், சீனப் பள்ளிகளிடையே கலகத்தை மூட்டிவிட பட்ஜெட் 2022 கருவியாக பயன்படுத்தப்படுகிறதா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

Leave a Reply