
வெ.1,500 குறைந்தபட்ச சம்பளம் ஓரிரு மாதங்களில் அமலாகலாம்- டத்தோஶ்ரீ சரவணன்
409 total views, 1 views today
கோலாலம்பூர்-
வெ.1,500 குறைந்தபட்ச சம்பளம் ஒன்று அல்லது இரு மாதங்களில் அமல்படுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் இன்று மக்களவையில் தெரிவித்தார்.
கடந்தாண்டு அரசாங்கம் உறுதியளித்தபடி குறைந்தபட்ச சம்பளம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அவர் சொன்னார். ஆயினும் விரைவில் என்றால் எப்போது? அதற்கு ஒரு கால வரையறை குறிப்பிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
குறைந்தபட்ச சம்பளம் தொடர்பில் அறிவிப்பை வெளியிட் அமைச்சரவை, பிரதமரின் அனுமதி முதலில் கிடைக்க வேண்டும். அதன் தொடர்பான ஆய்வு இறுதிகட்டத்தில் இருப்பதால் இன்னும் ஓரிரு மாதங்களில் அதனை அமல்படுத்த முடியுமென டத்தோஶ்ரீ சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.