வெ.7 லட்சம் வசூல் செய்துள்ள ‘பூச்சாண்டி’

Uncategorized

 172 total views,  2 views today

கோலாலம்பூர்-

திரையரங்கில் வெளியீடு கண்ட மூன்றே வாரங்களில் வெ.7 லட்சத்தை வசூல் செய்துள்ளது பூச்சாண்டி திரைப்படம். இயக்குனர் JK Wicky இயக்கத்தில் வெளியீடு கண்ட இத்திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.
இது குறித்து தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள JK Wicky இதுவரை 50,000 பார்வையாளர்களை கடந்துள்ளது எனவும் வெ.7 லட்சம் வசூல் செய்துள்ளது எனவும் பார்வையாளர்கள் 2, 3 முறை திரைப்படத்தை கண்டு களிக்கின்றனர் என்றும் பதிவிட்டுள்ளார்.
அதோடு 4 வாரத்தை நோக்கி நகரும் பூச்சாண்டி திரைப்படம் குவாந்தான், சிங்கப்பூர் திரையரங்களில் கூடுதல் காட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளன என்று JK Wicky   குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply