வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே மலேசியர்களின் தனிச்சிறப்பு ! – உகாதி வாழ்த்துச் செய்தியில் டத்தோ ஶ்ரீ மு சரவணன்

Uncategorized

 126 total views,  1 views today

கோலாலம்பூர் – 2 ஏப்பிரல் 2022

தெலுங்கு மற்றும் கன்டம் மொழி பேசும் மக்களின் புத்தாண்டான உகாதி திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய யுகாதி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்லின மக்கள் வாழும் மலேசியாவில், நாம் ஒரே மலேசியக் குடும்பமாக ஒவ்வொரு பெருநாளையும் கொண்டாடி மகிழ்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே மலேசியர்களின் தனிச்சிறப்பு.

அதே வேளையில் இந்த நாட்டில் நாம் பல்லின சமூகமாக வாழ்ந்தாலும், இந்தியர்கள் எனும் அடையாளத்தை ஒரு போதும் இழந்து விடக் கூடாது. நாம் ஒட்டு மொத்த இந்திய சமூதாயமாக இருக்கும் போதுதான் பலமான சமுதாயமாக, நமது உரிமைகளைப் பெறக் கூடிய சமூதாயமாக இருப்போம் என்பதை அனைவரும் நினைவு கூற வேண்டும்.

இப்புத்தாண்டு அனைவருக்கும் வளமும், நலமும் வழங்கும் ஆண்டாக மலர வேண்டும். அனைவருக்கும் இனிய உகாதி சுபகாஞ்சலு..

Leave a Reply