வேலையிடச் சூழல் மகிழ்ச்சி இல்லாததால் பணியில் இருந்து விலகும் மலேசியர்கள் !

Malaysia, News

 95 total views,  1 views today

கோலாலம்பூர் – 17 ஆகஸ்டு 2022

செய்து கொண்டிருக்கும் வேலையால் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிப்படையும் சூழல் ஏற்படுமேயானால், மலேசியாவில் 50% பணியாளர்கள் அந்தப் பணியில் இருந்து விலகத் தயங்குவதில்லை.

Randstad நடத்திய ஆய்வின்படி, 25 முதல் 32 வயது வரையிலான 55 விழுக்காட்டினர் இந்த முடிவை எடுப்பதாகத் தெரிய வந்துள்ளது,

இது குறித்து தகவல் அளித்த Randstad மலேசியாவின் தலைமைச் செயல்முறை அதிகாரி ஃபஹட் நயீம் தெரிவிக்கயில், இன்றையக் காலத்தில் மேற்குறிப்பிட்ட வயதுடையவர்கள் வேலைச் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வல்லமை கொண்டவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

அந்தப் பிரிவினர் வேலை, அதன் நோக்கம், முதலாளியின் பங்கு ஆகியவற்றுக்கு மற்றொரு பொருளுரையைக் கொடுத்துள்ளனர்.

வேலைச் சூழலுக்கு வெளியில் இருக்கும் வாழ்க்கையை அனுபவிக்க சுதந்திரமும் இலகு முறையும் அவசியம் என இப்போதையத் தலைமுறை கருதுகின்றனர்.

அதே சமயம், மன நலம், வேலை – தனிப்பட்ட வாழ்க்கை இவற்றுக்கு இடையேயான சமநிலை போன்றவற்றும்க்கும் இப்போதுள்ளவர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வேலைக்காக நேரத்தையும் உடல் நலத்தையும் தியாகம் செய்அவர்கல் மிகவும் குறைவாக உள்ளனர். அதிலும் அளவுடனேயே தியாகம் செய்கின்றனர்.

உள்ளூர் தொழில் தொடர்பான மனப்பாங்கு குறித்து ஓராண்டுக்கு இரண்டு முறை இந்த ஆய்வை Randstad நிறுவனம் மேற்கொண்டது.

வேலை யிடத்தில் மகிழ்ச்சி இல்லை என்றால் வேலையில்லாமலேயே இருந்திட மலேசியாவில் மூன்றில் ஒருவர் குறிப்பிடுகின்றனர்.

பெரியவர் ஆனதும் மூன்றில் ஒரு பங்கு வேலையிலேயே கழித்து விடுகின்றோம். எனவே, வேலையிடத்தில் திருப்தி நிலை மிக முக்கியம் என அவர்கள் குறிப்பிடுவதாக ஃபஹாட் சொன்னார்.

வேலையிடத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்றால் அது தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கும். குடும்பம், நண்பர்கள் ஆகியோருடன் தரமான நேரத்தைச் செலவழிப்பதை விட அதிகமாகப் புகார் செய்யுக்கூடும்.

நேர்மறையான நல்ல வேலையிட சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதில் வணிகர்கள், முதலாளிகள் ஆகியோர் பெரும்பங்கை வகிக்கின்றனர். அவர்களின் இத்தகையச் செயலால் ஆக்ககரமானப் பணியாளர்களையும் உருவாக்க முடியும்.

தனிப்பட்ட – சொந்த வாழ்க்கைக்கும் வேலைக்கும் சமநிலை இருக்க வேண்டும் என அந்த ஆய்வில் கலந்து கொண்ட 95 விழுக்காட்டினர் பதிலளித்துள்ளனர்.

இலகுவான வேலை நேரம் மிகவும் அவசியம் என 89 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.

Leave a Reply