வேலை வாய்ப்பு திட்டம் – 27 பேருக்கு வேலை உறுதி

Malaysia, News

 487 total views,  1 views today

ஷா ஆலம்-

சிலாங்கூர் மாநில மனிதவள மேம்பாட்டு பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற வேலை வாய்ப்பு திட்டத்தில் 27 பேருக்கு உடனடி வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் விஜயன் தெரிவித்தார்.
நேற்று புத்ரா ஹைட்சில் நடைபெற்ற வேலை வாய்ப்பு திட்ட நிகழ்வை சுபாங் ஜெயா மாநகர் மன்றத் தலைவர் டத்தோ ஜொஹாரி பின் அனுவார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கண்காணிப்பில் செயல்படும் மனிதவள மேம்பாட்டு பிரிவு, சிலாங்கூர் மாநிலத்தில் நிலவும் வேலை வாய்ப்பின்மை சூழலை அதிரடியாக குறைப்பதுதான்.


அதன் அடிப்படையில் கிள்ளானிலும் ரவாங்கிலும் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கிள்ளானில் 58 பேருக்கும் ரவாங்கில் 38 பேருக்கும் உடனடியாக வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது.

அதே போன்று இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் 140 பேர் பங்கு பெற்ற நிலையில் 130 பேர் உடனடி நேர்முகத் தேர்வில் பங்கேற்று 27 பேருக்கு உடனடி வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. 72 பேர் இரண்டாவது நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.


இதேபோன்று அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு திட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் இனிவரும் காலங்களில் அவை செயல்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

நேற்றைய வேலை வாய்ப்பு திட்டத்தில் 10க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்றன. சிலாங்கூர் மாநில பெர்கேசோவின் இயக்குனர் ஸைனோல் பின் அபுவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

Leave a Reply