ஸம்ரி வினோத்திற்கு ஆலயத்தில் அனுமதியா? வெடிக்கும் சர்ச்சை

Malaysia, News

 412 total views,  2 views today

கோலாலம்பூர்-

இந்து சமயத்தையும் இந்து தெய்வங்களையும் இழிவுப்படுத்தி பேசி வரும் சமய போதகர் ஸம்ரி வினோத்திற்கு பெர்லிஸ், ஆராவிலுள்ள ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய வளாகத்தில் அனுமதி கொடுக்கப்பட்டது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.

சம்பந்தப்பட்ட ஆலயத்திற்கு கல்வி சுற்றுலா சென்றுள்ள மாணவர்களுடன் சென்ற ஸம்ரி வினோத்திற்கு ஆலய நிர்வாகம் அனுமதி கொடுத்தது ஏன்? என்று சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்து சமயத்தையும் தெய்வங்களையும் இழிவுப்படுத்திய பேசிய ஒருவருக்கு ஆலயத்தில் நுழைய எவ்வாறு அனுமதி கொடுக்கலாம்? ஸம்ரி வினோத் மீது 3,000க்கும் அதிகமான போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில் இத்தகைய நடவடிக்கைகள் நம்மை நாமே இழிவுப்படுத்திக் கொள்வது போலாகும் என்று ஆகம அணி தலைவர் அருண் துரைசாமி காணொளி பதிவில் குறிப்பிட்டார்.

ஸம்ரி வினோத் யாரென்று தெரியாத ஆலய நிர்வாகம் பதவியில் இருப்பதை காட்டிலும் பதவி விலகுவதே மேல் என்று அவர் காட்டமாக குறிப்பிட்டார்.

அதோடு ஸம்ரி வினோத்திற்கு ஆலய வளாகத்தில் அனுமதி கொடுப்பது முறையாகுமா? என்று பலரும் தங்களது ஆட்சேபத்தை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply