ஹிஷாமுடினை பிரதமராக்கும் பெரிக்காத்தான் நேஷனல் ?

1 Minute News, Malaysia, News, Politics, Polls

 62 total views,  3 views today

இரா. தங்கமணி – 23/11/2022

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் நடந்து முடிந்து 4 நாட்களை கடந்து விட்ட நிலையில் எந்தவொரு கூட்டணி கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.

நாட்டின் 10ஆவது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரா? அல்லது டான்ஸ்ரீ முஹிடினா? என்ற ஆடு புலி ஆட்டமே இந்நாள் வரையிலும் நீடித்தது.

இதில் திருப்புமுனையாக அம்னோவைச் சேர்ந்த டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேனை பிரதமராக்க பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி வாய்ப்பு வழங்கியுள்ளது.

மத்திய அரசாங்கத்தை அமைத்திட தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வலை விரிக்க பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தந்திரமாக இந்நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

தேசிய முன்னணியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிட ஹிஷாமுடினை பிரதமராக்க பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் இந்த திருப்புமுனை நகர்வு அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

Leave a Reply