ஹைக்கோம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தேசியக் கொடிகள் அன்பளிப்பு

Education, Indian Student, Malaysia, Malaysia, News, Tamil Schools

 58 total views,  1 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம் – 24 ஆகஸ்டு 2022

நாட்டின் 65 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியை பறக்கவிடும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் ஷா ஆலம், ஹைக்கோம் தமிழ்ப்பள்ளியில் தேசியக் கொடி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அலாம் மெகா இந்திய சமூகத் தலைவர் எம்.கோபி அப்பள்ளியில் பயிலும் 170க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தேசியக் கொடிகளை வழங்கினார்.

நாட்டின் சுதந்திரமும் அதன் போராட்டமும் அடுத்தத் தலைமுறைக்கும் கடத்தப்பட வேண்டும் எனும் நோக்கில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது என்று கோபி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர், மாணவர் நலப் பிரிவு பொறுப்பாசிரியர் குமரன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நாதன், கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதி சேவை மைய பொறுப்பாளர் அர்விந்த் உட்பட ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

Leave a Reply