10 தொகுதிகளில் போட்டியிடுகிறது மஇகா- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

Malaysia, News, Politics

 124 total views,  1 views today

கோலாலம்பூர்-

தேசிய முன்னணி அறிவித்துள்ள 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் மஇகா போட்டியிடும். அதில் எவ்வித மாற்றமும் கிடையாது என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சுங்கை சிப்புட், தாப்பா, உலு சிலாங்கூர், தெலுக் இந்தான், கோல லங்காட், போர்ட்டிக்சன், பத்து, பாடாங் செராய், சிகாமாட், கோத்தாராஜா ஆகிய தொகுதிகளில் மஇகா வேட்பாளர் களமிறங்குவார்கள்.

பத்து நாடாளுமன்றத் தொகுதியை மசீச கோரினாலும் அறிவிக்கப்பட்ட முடிவில் எவ்வித மாற்றமும் கிடையாது என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

Leave a Reply