100க்கும் குறைவான எம்பிக்களே ஆதரவு- நஜிப்

Uncategorized

 96 total views,  1 views today

கோலாலம்பூர்-

100க்கும் குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையே பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் பெற்றுள்ளார் என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.
முஹிடின் யாசினுக்கு கிடைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 102 அல்ல. 90 அல்லது 95ஆக இருக்கலாம். உண்மையிலேயே அவருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்றால் உடனடியாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியிருக்க கூடுமென்று அவர் சொன்னார்.
தேசிய முன்னணியின் 31 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு முஹிடின் யாசினுக்கு இருக்கிறது என அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
நாட்டில் நிலவும் நிலைத்தன்மையற்ற அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்படாத வரை கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளும் தோல்வியே காணும் என்று டத்தோஶ்ரீ நஜிப் கூறினார்.

Leave a Reply