100% தமிழ் பொழுதுபோக்குச் செயலி ஆகா ! – டத்தோ சரவணன் அறிமுகம் செய்தார் !

Cinema, India, Malaysia, News, World

 46 total views,  2 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 19 செப் 2022

தமிழகத்தில் வளர்ந்து வரும் ஆகா தமிழ் பொழுதுபோக்குச் செயலி இப்போது மலேசியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ மு சரவணனும் தமிழ்த் திரைப்பட இசை அமைப்பாளர் அனிரூத்தும் இணைந்து அறிமுகம் செய்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சி தலைநகர் பார்க் ரோயல் கொல்லெக்‌ஷனில் நடந்தேறியது.

மற்ற இணையத்தள பொழுது போக்கு தளங்களைக் காட்டிலும் முழுக்க முழுக்க தமிழ்ப் பொழுது போக்கு செயலியாக வலம் வர இருக்கும் ஆகா செயலி விலையிலும் மிகக் குறைவாக இருப்பதில் டத்தோ ஶ்ரீ சரவணன் மகிழ்ச்சி அடைவதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழ் நாட்டுக் கலைப் படைப்புக்ளோடு மலேசியக் கலைப் படைப்புகளுக்கும் இந்தச் செயலியில் வெளியிடப்படும். மலேசியக் கலைஞர்களின் படைப்புகளுக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை எனும் நிலை மாறி அவர்களின் படைப்புகளும் இதில் வெளியிடப்படும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காலம் காலமாக மலேசியத் தமிழ்ப் படைப்பாளர்களிடையே இருந்து வரும் இந்தக் குறைபாட்டை நீக்கும் தன்மை இந்த ஆகா ! செயலி நிவர்த்தி செய்வது தமக்கு மட்டற்ற மகிழ்ச்சி எனவும் டத்தோ ஶ்ரீ சரவணன் கூறினார்.

Leave a Reply