13 லட்சம் மலேசியர்கள் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்து விட்டனர்- சிவகுமார்

Uncategorized

 93 total views,  1 views today

கோலாலம்பூர்-

சுமார் 13 லட்சத்து 30 ஆயிரம் (1.13 மில்லியன்)
மலேசியர்கள் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்து விட்டனர் என்று மனிதவள அமைச்சர் வ சிவக்குமார் தெரிவித்தார்.

மலேசியா மடானி நிபுணத்துவ விவகாரங்களில் உள்ள அறைகூவல்கள் எனும் தலைப்பில் டேலண்ட் கோர்ப் நடத்திய கலந்துரையாடலில் கலந்து கொண்டு மனிதவள அமைச்சர் சிவக்குமார் இதனைத் தெரிவித்தார்.

தொழில்துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களை தக்க வைத்து கொள்வது மிகப் பெரிய அறைகூவலாக உள்ளது.

மலேசியாவில் இருந்து வேலை தேடி வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை 1.86 மில்லியன் ஆகும்.

இந்த எண்ணிக்கையில் 1.13 மில்லியன் பேர் சிங்கப்பூருக்கு சென்று விட்டனர்.

இதனால், திறமையானவர்களையும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களையும் நாம் இழந்து விடுகிறோம்.

இது மலேசியாவில் மட்டும் நிகழவில்லை. உலக மக்கள் தொகையில் 3.6 சதவீதம் பேர் சொந்த நாடுகளில் இருந்து மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்து விட்டனர் என்று அவர் சொன்னார்

Leave a Reply