14 நாட்கள் தேர்தல் பரப்புரை போதாது ! – பெர்சே

Malaysia, News, Politics, Polls

 93 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 20/10/2022

பொதுத் தேர்தலை முன்னிட்டு பரப்புரைக்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் 14 நாட்கள் போதாது என தேர்தல் உருமாற்றுக் குழுவான பெர்சே தெரிவித்துள்ளது.

கூடுதலாக 7 நாட்கள் கொடுக்கப்பட வேண்டும் எனவும் அப்போதுதான் வாக்காளர்களைப் போட்டியிடும் கட்சிகள் சந்திக்க இயலும் என அவ்வமைப்பு கூறுகிறது.

கடந்தப் பொதுத் தேர்தலைக் காட்டிலும் இம்முறை நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலிலரதிகமான வாக்காளர்கள் பங்கு பெற உள்ளனர்.

மேலும், 21 நாட்கள் பரப்புரைக்காகக் கொடுக்கப்படும்போது, வெளிநாட்டில் இருக்கும் அஞ்சல் வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை அனுப்பப் போதிய காலம் இருக்கும் எனவும் அவ்வமைப்பு விளக்கியது.

அதே சமயம், அஞ்சல் வாக்காளர்கள் குறித்து கருத்துரைக்கயில், அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்படுஅது போல் வெளிநாட்டில் இருக்கும் மலேசியக் குடிமக்களுக்கும் அஞ்சல் வாக்களிக்க கூடுதலாக 7 நாட்கள் கொடுக்கப்பட வேண்டும் எனவும் அது வலியுறுத்தியது.

அஞ்சல் வாக்காளர் பதிவு இறுதி நாள்

வெளிநாட்டில் இருக்கும் மலேசியர்கள் : 23-10-2022

அரசாங்க அதிகாரிகள், அமைப்புகள் : 26-10-2022

ஆயுதப்படை, காவல் படை, ஊடகவியலாளர்கள், தேர்தல் ஆணைய ஊழியர்கள் : 2-11-2022

பொதுத் தேர்தலுக்கானத் தேதியை இப்போதுதான் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், வெளிநாட்டில் இருக்கிர மலேசியர் பலர் தாங்கள் அஞ்சல் வாக்களிக்கப் பதிய வேண்டியது குறித்து தெரிய வந்துள்ளது.

Leave a Reply