15ஆவது பொதுத் தேர்தலில் நீல அலை எதிரொலிக்கும்- வீரன்

Malaysia, News, Politics

 415 total views,  1 views today

தைப்பிங்-

ஜோகூர் மாநில தேர்தலில் அடைந்த வெற்றியின் தாக்கம் நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் நீல அலையாக எதிரொலிக்கும் என்று மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினர் மு.வீரன் குறிப்பிட்டார்.
கூடிய விரைவில் 15ஆவது பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என கருதப்படும் வேளையில் அத்தேர்தலில் தேசிய முன்னணி முழு வீச்சில் இறங்கி பிரச்சாரம் மேற்கொள்ளும்.

அதே வேளையில் எதிர்க்கட்சி கூட்டணியினரிடம் காணப்படும் பிளவு, கருத்து வேறுபாடு யாவும் மக்கள் தேசிய முன்னணி மீது நம்பிக்கைக் கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது.
தேசிய முன்னணிக்கான ஆதரவு மலேசியர்கள் மத்தியில் பெருகி வரும் நிலையில் அது நீல அலையாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை என தைப்பிங் தொகுதி மஇகா தலைவருமான வீரன் சொன்னார்.

Leave a Reply