15ஆவது பொதுத் தேர்தல் நிலவரம் : இதிய வேட்பாளர்களும் வெற்றி தோல்விகளும் !

Malaysia, News, Politics, Polls

 62 total views,  1 views today

கோலாலம்பூர்-

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் இந்திய வேட்பாளர்கள் களமிறங்கிய நாடாளுமன்றத் தொகுதிகளின் நிலவரம்

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் 19,791 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிஎச் வேட்பாளர் கேசவன் 21,637 வாக்குகள் பெற்று 1,846 பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதியில் பிஎச் வேட்பாளர் எம்.குலசேகரன் 56,667 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அவர் 63,915 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டான்ஶ்ரீ எம்.கேவியஸ் 378 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

பத்துகாஜா நாடாளுமன்றத் தொகுதியில் பிஎச் வேட்பாளர் வீ.சிவகுமார் 53,836 வாக்குகள் பெரும்பான்மையில் தனது தொகுதியை தற்காத்துக் கொண்டார். அவர் மொத்தம் 60,999 வாக்குகளை பெற்றார்.

தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் 18,398 வாக்குகள் பெற்று தனது தொகுதியை தற்காத்துக் கொண்டார். 5064 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சரவணனை எதிர்த்து போட்டியிட்ட பிஎச் வேட்பாளர் திருமதி சரஸ்வதி கந்தசாமி 13,334 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட மஇகா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா 12,304 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.

ஜோகூர், சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் தேமு சின்னத்தில் போட்டியிட்ட மஇகா பொருளாளர் டான்ஶ்ரீ எம்.ராமசாமி 17,768 வாக்குளை பெற்று தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து பிஎச் சின்னத்தில் போட்டியிட்ட ஆர்.யுவனேஸ்வரன் 5669 வாக்குகள் பெரும்பான்மையில் 23,437 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.

போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் தேமு வேட்பாளராக களமிறங்கிய மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ பி.கமலநாதன் பிஎச் வேட்பாளர் டத்தோஶ்ரீ அமிருடின் பின் ஹருணிடம் 23,601 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.

நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியில் தேமு வேட்பாளராக போட்டியிட்ட மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் 10660 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார். இத்தொகுதியில் பிஎச் வேட்பாளர் ஃபட்லினா பிந்தி சிடேக் 16,293 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

ஜெலுத்தோங் நாடாளுமன்றத் தொகுதியில் பிஎச் வேட்பாளர் ஆர்.எஸ்.என்.ராயர் 38,604 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அத்தொகுதியில் தேமு வேட்பாளராக களமிறங்கிய ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ லோகநாதன் 7387 வாக்குகள் பெற்று தோல்வி தழுவினார்.

உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேமு வேட்பாளராக களம் கண்ட மஇகா உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் 27,050 வாக்குகளும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் 45261 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவினர். இத்தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் ஹஸ்னிசான் ஹருண் 46823 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார்.

பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதியில் தேமு வேட்பாளராக களமிறங்கிய கிம்மா கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ சைட் இப்ராஹிம் 21468 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். இத்தொகுதியில் பிஎச் வேட்பாளர் இயோ பீ யின் 57957 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அவருக்கு 79425 வாக்குகள் கிடைத்தன.

டாமன்சாரா நாடாளுமன்றத் தொகுதியில் பிஎச் வேட்பாளரான கோபிந்த் சிங் டியோ 124,619 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அவருக்கு 142,875 வாக்குகள் கிடைத்தன.

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் பிஎச் வேட்பாளரான ரமணன் ராமகிருஷ்ணன் 2693 வாக்குகள் பெரும்பான்மையில் அம்னோவின் கைரி ஜமாலுடினை தோற்கடித்தார். ரமணன் 50943 வாக்குகளும் கைரி ஜமாலுடின் 48250 வாக்குகளும் பெற்றனர்.

கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் பிஎச் வேட்பாளராக களமிறங்கிய வீ.கணபதிராவ் 91801 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். கணபதிராவ் 115539 வாக்குகளை பெற்ற வேளையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாரிசான் ராக்யார் சபா வேட்பாளர் டாக்டர் ஜெய சந்திரன் 23,738 வாக்குகளும் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய தீபக் ஜெய்கிஷன் 439 வாக்குகளும் பார்ட்டி ராக்யாட் மலேசியா கட்சியின் வேட்பாளர் சந்திரசேகர் 271 வாக்குகளும் பெற்றனர்.

கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில் தேமு வேட்பாளராக களமிறங்கிய கஜேந்திரன் பிஎச் வேட்பாளரான அமானா கட்சியின் தலைவர் முகமட் மாட் சாபுவிடம் 49308 வாக்குகள் பெரும்பான்மையில் தோல்வி தழுவினார்.

கோலலங்காட் நாடாளுமன்றத் தொகுதியில் தேமு வேட்பாளரான மஇகா மகளிர் தலைவி டத்தோ மோகனா முனியாண்டி பெரிக்காத்தான் வேட்பாளர் டாக்டர் அஹ்மாட் யூனுஸ் ஹைரியிடம் தோல்வி கண்டார். இத்தொகுதியில் மோகனா 18685 வாக்குகள் மட்டுமே பெற்றார். பிஎச் வேட்பாளரான மணிவண்ணன் கோவிந்த் 51,034 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

பத்து நாடாளுமன்றத் தொகுதியில் பிஎச் வேட்பாளராக களம் கண்ட பிரபாகரன் பரமேஸ்வரன் 22242 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அவருக்கு 45716 வாக்குகள் கிடைத்தன. இத்தொகுதியில் தேமு வேட்பாளரான அ.கோகிலன் பிள்ளை 10,398 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார்.

பகாங், சபாய் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கிய வி.ஆறுமுகம் 96 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 4444 வாக்குகள் கிடைத்தன. ஆறுமுகத்தை எதிர்த்து போட்டியிட்ட பிஎச் வேட்பாளர் காமாட்சி துரைராஜு 4348 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

Leave a Reply