15வது பொதுத் தேர்தலில் வெல்லக் கூடியத் தொகுதிகளை எதிர்ப்பார்க்கும் ம.இ.கா. !

Malaysia, News, Politics

 286 total views,  1 views today

கோலாலம்பூர் – 14 ஆகஸ்டு 2022

எதிர்வரும் 15வது பொதுத் தேர்தலில் ம.இ.கா.வுக்கு வெல்லக் கூடியத் தொகுதிகளை தேசிய முன்னணி வழங்கும் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாக ம.இ.கா.வின் தேசியத் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அக்கட்சி வெல்லக் கூடிய நாடாளுமன்ற – சட்டமன்றத் தொகுதிகளை வழங்கினால் இந்திய சமுதாயத்தின் நிகராளிகள் உயர்மட்டத்தில் தங்களின் பிரச்சனைகளைத் தீர்க்க  ஏதுவாக இருக்கும் என அவர் மேலும் சொன்னார்.

மாநில நிலையில் ஆட்சிக் குழு உறுப்பினராக இருக்கின்ற நிலையில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் மையாள இது வழி வகை செய்யும்.

தேர்தலில் அம்னோ மட்டுமே வேலை செய்து அவர்கள் மட்டுமே வெற்றி பெற எதிர்ப்பார்க்க வில்லை. அம்னோவுக்கு உதவுவதோடு தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சி எனும் அடிப்படையில் இந்தப் போராட்டத்திலும் ம.இ.கா. முன் வரிசையில் இருக்க எண்ண கொண்டுள்ளதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று ஈப்போவில் நடைபெற்ற பேரா மாநில ம.இ.கா.வின் 76வது பேராளர் மாநாட்டில் கலந்து கொண்ட தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு சொன்னார்.

ம.இ.கா.வின் இந்த நிலைப்பாட்டை தேசிய முன்னணியின் தேசியத் தலைவரான டத்தோ ஶ்ரீ டாக்டர் அகமாட் ஸாஹிட் ஹமிடியிடம் தாம் தெரிவித்து விட்டதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

Leave a Reply