15வது பொதுத் தேர்தலில் தேசியக் கூட்டணியின் எதிரி தேசிய முன்னணி ! – நேரடியாக அறிவித்த முகிதீன்

Malaysia, News, Politics, Polls

 81 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 24 செப் 2022

எதிர்வரும் 15வது பொதுத் தேர்தலில் தேசியக் கூட்டணியின் முதன்மை எதிரியாக தேசிய முன்னணி என அறிவித்திருக்கிறார் முகிதீன் யாசின்.

தேசியக் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளின் முழு ஒப்புதலுக்குப் பிறகு அறிவிப்பதாகவும் அவர் சொன்னார்.

எதிர்வரும் 15வது பொதுத் தேர்தலில் தேசியக் கூட்டணியில் பெர்சத்து, பாஸ், கெராக்கான், ஸ்டார், SAPP ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்திருக்கின்றன.

நம்பிக்கைக் கூட்டணி குறித்து விவாதிக்க விரும்பவில்லை எனவும் அம்னோ எல்லா தொகுதிகளிலும் போட்டியிட்டாலும் கவலை இல்லை எனவும் அவர் சொன்னார்.

பாஸ் கட்சியுடன் எதிர்நிலை

இந்தக் கூற்று பாஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிர்நிலையில் இருக்கிறது. பாஸ் கட்சியின் முதன்மை எதிரியாக நம்பிக்கைக் கூட்டணியை சுட்டிக் காட்டும் நிலையில், தேசிய முன்னணி பாஸ் கட்சி ஒத்துழைப்பு பங்காளியாக இருக்கின்றன.

இதர செய்திகள்
– முன்கூட்டியே தேர்தலா ? மூன்று விவகாரங்கள் மீது அமைச்சரவை கவலை ?

– கேமரன் மலை உட்பட 12 இடங்களைக் குறி வைக்கும் ம.இ.கா. ?

– பொதுத் தேர்தல் தேதி : அமைச்சரவையில் இரு அணிகளா ?

– பினாங்கில் சில பகுதிகளில் திடீர் வெள்ளம் !

அம்னோ – தேசிய முன்னணியுடன் பாஸ் கட்சியின் பங்காளித்துவம் தேசிய ஒருமைப்பாட்டை முன்னிறுத்தும் எனவும் நம்பிக்கைக் கூட்டணியை எதிர்கொள்ளும் வியூகமாகவும் பார்க்கப்படுவதாக பாஸ் கட்சியின் செயலாளர் தக்கியுடீன் ஹசான் தெரிவித்திருந்தார்.

மக்கள் மீது பரிவுமிகுந்த அரசாங்கத்தை உருவாக்கும் முன்னெடுப்பை பெரும்பான்மை வாக்காளர்கள் ஏற்றுக் கொள்வதாகவும் அதற்காக முழுமையான சேவையை மக்களுக்கு வழங்குவதோடு சமநிலைத் தன்மையை மேலும் சரியாக செயலாக்க உதவும் என அவர் குறிப்பிட்டார்.

மலாய் – இஸ்லாமியக் கட்சிகளிடையேயான ஒற்றுமையும் பங்காளித்துவமும் இரண்டு முனைக்கும் மேலான போட்டியை 15வது பொதுத் தேர்தலில் சந்திக்க பாஸ் கட்சி முன்னெடுக்கிறது.

பாஸ் கட்சி தொடர்பான அந்த வேறுபாடு 15வது பொதுத் தேர்தலில் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் முகிதீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply