15வது பொதுத் தேர்தல் : அஞ்சல் வாக்காளர் பதிவு தொடக்கம் ! – தேர்தல் ஆணையம்

Malaysia, News, Politics, Polls

 114 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 10/10/2022

எதிர்வரும் 15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு வெளீநாட்டில் இருக்கு மலேசியர்களுக்கான அஞ்சல் வாக்களிக்க அதற்கானப் பதிவை தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கின்றது.

இது குறித்துத் தகவல் அளித்த அதன் செயலாளர் இந்திரா இக்மாருடின் இஷாக் தெரிவிக்கயில், இப்பதிவுக்கான இறுதி நாள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனக் கூறினார்.

அதே சமயம், சபாவின் புகாயா சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதியையும் மிக விரைவில் முடிவு செய்து அறிவிக்கப்படும் எனவும் சொன்னார்.

தேர்தல் ஆணைய அதிகாரிகள், காவல் துறையினர், ஆயுதப்படையினர், ஊடகவியலாளர்களுக்கான அஞ்சல் வாக்களிப்புப் பதிவுக்கு அதன் பாரத்தை https://www.spr.gov.my எனும் இணையப் பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறைவு செய்த பாரத்தைத் தங்கள் வட்டாரத்தில் உள்ளத் தேர்தல் ஆணைய அலுவலகங்களில் கொடுக்கலாம்.

வெளிநாட்டில் இருக்கும் மலேசியர்கள் https://myspr.spr.gov.my/login என் உம் இணையப் பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

Leave a Reply