15வது பொதுத் தேர்தல் : பினாங்கு மாநிலத்தில் வேறு கட்சி தன்னை நிலை நிறுத்துமா ?

Malaysia, News, Politics, Polls

 73 total views,  1 views today

– குமரன் –

ஜோர்ஜ் டவுன் – 30-10-2022

கடந்த 3 தவணையாக நம்பிக்கைக் கூட்டணியில் அங்கத்துவம் பெறும் ஜ.செ.கவின் கோட்டையாக விளங்கும் மாநிலம் பினாங்கு. ஆனாலும்கூட, இந்தப் பொதுத் தேர்தலில் இருந்து வேறு கட்சிகள் அல்லது கூட்டணி அம்மாநிலத்தில் தமது வெற்றியை மெல்ல நிலைநாட்டலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தாசேக் கெலுகோர், நிபோங் தெபால், பாயான் பாரு ஆகிய நாடாளூமன்றத் தொகுதிகளில் நம்பிக்கைக் கூட்டணிக்கும் தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி ஆகியக் கட்சிகளுக்கும் இடையே கடுமையானப் போட்டி நிலவக் கூடும் எனக் கணிக்கப்படுகிறது.

சரியான – தகுதியான – கட்சியில் உயர் பதவியில் இருக்கும் – பலரின் ஆதரவப் பெற்ற வேட்பாளரை நிறுத்தினால், நிச்சயமாக வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்பை ஜ.செ.க. கொண்டிருக்கும்.

கடந்த 14வது பொதுத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் இருக்கும் 13 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஜ.செ.க. 7 தொகுதிகளையும் பிகேஆர் 4 தொகுதிகளையும் அம்னோ வாயிலாக தேசிய முன்னணி எஞ்சியுள்ள 2 தொகுதிகளையும் வெற்றி கொண்டன.

பாயான் பாரு நாடாலூமன்றத் தொகுதியை பிகேஆர்-இன் சிம் ௶இ ஸிநும் நிபோங் தெபால் நாடாளுமன்றத் தொகுதியை பிகேஆர்-இன் மன்சோர் ஓத்மானும் வெற்றி கொண்டனர். தாசேக் கெலுகோரை அம்னோவைச் சேர்ந்த ஷாபுடின் யாஹயா வென்றார்.

ஆனால், பெர்சத்து கட்சியில் மன்சோரும் ஷாபுடினும் இணைந்ததில் பிகேஆர்-உம் அம்னோவும் தலா ஒரு தொகுதியை இழந்தன.

பாகான், புக்கிட் மெர்த்தாஜாம், பத்துகாவான், புக்கிட் பெண்டேரா, தஞ்சோங் ஜெலுத்தோங், புக்கிட் கெலுகோர் ஆகியத் தொகுதிகள் ஜ.செ.ஜ.வின் பலம் நிறைந்தத் தொகுதிகள்.

அரசியல் களத்தில் மிகவும் பாதுகாப்பான தொகுதி என எதுவுமே கிடையாது. எது வேண்டுவேமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.

பினாங்கு மாநில அரசியல் நிலவரப்படி அங்கு அதிக மாற்றங்கள் நிலவியுள்ளன. கடந்த 1968 வரை ம.சீ.ச. அங்கு தமது கோட்டையைக் கட்டி நிலைத்திருந்தது. 1968க்குப் பிறகு அங்கு கெராக்கான் தமது பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிருந்தது.

நாட்டின் 12வது பொதுத் தேர்தலில் பினாங்கு வாக்காளர்கள் தங்களின் ஆதரவை ஜ.செ.க.வுக்கு மாற்றினர். இந்த அடிப்படையில், வேட்பாளரின் வெற்றி எப்போது வேண்டுமானாலும் மாறலாம் எனத் தெரிய வருகிறது.

இந்நிலையில், 18 – 20 வயது நிறைந்த வாக்காளர்கள் இம்முறை நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்ள நிலையில் அவர்களின் நிலைப்பாடு இன்னும் தெளிவாகத் தெரிய வில்லை. அவர்கள் வாக்களிக்கும் விழுக்காடும் பெரும்பான்மையாக இருக்குமா என்பதும் சந்தேகம்தான்.

தேர்தல் ஆணையத்தின் புள்ளி விவரப்படிம் பினாங்கு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 1.2 மில்லியன் வாக்காளர்களில் 18 – 20 வயது நிறைந்தவர்கள் 68,000 பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply