1,509 சிறார்கள் காணாமல் போயுள்ளனர்- போலீஸ்

Crime, Malaysia, News

 100 total views,  2 views today

கோலாலம்பூர்-

நாட்டில் 2020ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை, 18 வயதுக்குக் கீழ்பட்ட 1,509 சிறார்கள் காணாமல் போயிருப்பதாக புக்கிட் அமான் தகவல் வெளியிட்டது.

காணாமல்போன சிறார்களில் பெண் குழந்தைகளே அதிகம் ஆவர்.  அதில் 1,113 பெண் குழந்தைகள், 396 ஆண் குழந்தைகள் அடங்குவர் என்று புக்கிட் அமான் குற்றவியல் பிரிவுத் தலைவர் Abd Jalil Hassan கூறினார்.

அவர்களில் 1,424 பேர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 85 பேரை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மீட்கபட்டவர்களில் ஒரு சிலர் விபத்து, நீரில் மூழ்கிய காரணங்களால் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர் என்றும் அவர் மேலும் சொன்னார்.

Leave a Reply