Malaysia, News

 92 total views,  1 views today

கோலாலம்பூர்

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னணியின் வெற்றிக்காக கடந்த 13 ஆண்டுகளாக விசுவாசத்துடன் உழைத்து வரும் கட்சி மலேசிய மக்கள் சக்தி கட்சி. பொதுத் தேர்தல், இடைத் தேர்தல் என தேசிய முன்னணியின் வெற்றிக்காக ஓயாமல் பாடுபட்ட இக்கட்சியின் உழைப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

அதன் அடிப்படையில் வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் ஏதேனும் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத் தொகுதியில் இக்கட்சியின் வேட்பாளர்கள் களமிறக்கப்படுவர் என்று புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 13ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டை இயங்கலை வழி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி இவ்வாறு கூறினார்.

ஹிண்ட்ராஃப் போராட்டத்திற்கு பின்னர் இந்தய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் கட்சியாக உருவெடுத்த மலேசிய மக்கள் சக்தி தேமுவின் பங்காளி கட்சியாக இல்லாவிட்டாலும் தேமுவின் வெற்றிக்காக தொடர்ந்து களப்பணி ஆற்றியுள்ளது.

15ஆவது பொதுத் தேர்தலில் தேமுவின் கீழ் போட்டியிட வேட்பாளர்களை தயார்படுத்தும்படி  அக்கட்சியின்  தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரனிடம் கோரியுள்ளோம்.

அடுத்த பொதுத் தேர்தலில் நிச்சயமாக தேமு மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று டத்தோஸ்ரீ ஸாயிட் தமதுரையில் குறிப்பிட்டார்.

Leave a Reply