அடைமழை… சூழும் வெள்ளம்… பரிதவிப்பில் மக்கள்…தீர்வு எப்போது?

Uncategorized

 129 total views,  1 views today

சுங்கை சிப்புட்-

அடைமழை அல்ல ஒரு மணிநேரம் விடாமல் மழை பெய்தாலே ஆறு போல் பெருகெடுத்து ஓடும். பெருக்கெடுக்கும் வெள்ளத்தினால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து பொருட்கள் சேதமடைகின்றன. இந்த துயரம் ஏதோ ஒரு தடவையோ வருடத்திற்கு ஒருமுறையோ நடப்பவை அல்ல… வருடத்திற்கு மூன்று, நான்கு முறை நிகழ்கின்றன. இந்த துயரத்திற்கு சொந்தக்காரர்கள் வேறுமல்ல… சங்கநதி என புகழப்படும் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் தான் அரங்கேறி கொண்டிருக்கிறது.

சிறு மழை பெய்தாலே சாலையெல்லாம் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்படுவது தாமான் முஹியா ஜெயா, லிந்தாங் மக்மூர் உட்பட சில பகுதிகள் ஆகும். இரவு நேரங்களில்  மழை பெய்தால் மக்கள் படும் பாடு பெரும்பாடாகும்.

சில காலமாகவே இப்பிரச்சினை தொடர்கதையாகிக் கொண்டிருந்த நிலையில் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இப்பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக நீர் உறிஞ்சி இயந்திரங்களை பொருத்தினார்.

ஆயினும் மழை பெய்தாலே  வெள்ளம் ஏற்படுமா? என்ற அச்சத்தில் வாழும் சூழ்நிலையை சுங்கை சிப்புட் மக்கள் தற்போது எதிர்கொண்டு வருகின்றனர்.

சுங்கை சிப்புட்டை உலுக்கும் இந்த வெள்ளப் பிரச்சினைக்கு தொகுதி  மஇகா சார்பில் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு  உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தொகுதி மஇகா தலைவர் இராமகவுண்டர், செயலாளர் கி.மணிமாறன் ஆகியோர் தெரிவித்தனர்.

நீர் உறிஞ்சி இயந்திரம் ஒரு தற்காலிக தீர்வே தவிர நிரந்தர தீர்வு காண வடிக்கால், நீர் பாசன இலாகாவும் மாவட்ட அலுவலகமும் இணைந்து ஆக்க்கரமான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று மணிமாறன் கூறினார்.

Leave a Reply