191 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேசிய முன்னணி போட்டி ! – ஸாஹிட் ஹமிடி

Malaysia, News, Politics, Polls

 154 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 16/10/2022

எதிர்வரும் 15வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி 191 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என அக்கூட்டணியின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளும் தேசிய முன்னணியின் தோழமைக் கட்சிகள் அனைவருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்ப்படும் என்றார் அவர்.

முதன் முறை என்றாலும் தேசிய முன்னணியின் தோழமைக் கட்சிகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். அவர்களை என்றுமே மறந்ததில்லை.

தேசிய முன்னணியின் தோழமைக் கட்சிகள் பட்டியலில் மலேசிய மக்கள் சக்தி கட்சி, சிந்தா மலேசியா கட்சி, ஐபிஎஃப், கிம்மா, பெர்சத்து இந்தியா மலேசியா கட்சி, மலேசிய பஞ்சாபி கட்சி ஆகியன இடம் பெறுகின்றன.

கடந்த 2013 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட மலேசிய மக்கள் சக்தி கட்சி தேசிய முன்னணியின் கீழ் தேர்தலில் போட்டியிட அக்கூட்டணியிடம் கோரிக்கை வைத்திருந்தது. ஆனால், அந்தக் கோரிக்கைக்கு ம.இ.கா. உடன்பட வில்லை என சில ஆருடங்கள் முன்னதாக இருந்தன.

Leave a Reply